பவம் போக்கும் பவ கரணம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஹம் ஸ்வர யோகம்

ஓம் என்பது அற்புத சக்தி வாய்ந்த பீஜாட்சர மந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. அது போல எண்ணற்ற பீஜாட்சர மந்திரங்கள் எம்பெருமானின் உடுக்கை நாதத்திலிருந்து சதா சர்வ காலமும் தோன்றி இப்பிரபஞ்சத்தில் நிறைந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த பீஜாட்சரங்களுக்கெல்லாம் ஆதியான தனக்குத்தானே அநாதியான பீஜாட்சரமே ஹம் என்ற பீஜாட்சர மந்திரம் ஆகும். ஓம் என்று சொல்லும்போது அது உண்மையில் வெறும் ஓம் என்ற சொல் கிடையாது, பல ஆயிரக் கணக்கான ஒலி ஒளி சக்திகளின் சங்கம சக்திளைக் குறிக்கும் அடையாளச் சின்னம் என்பதே உண்மை.
அதே போல ஹம் என்பதும் பல்லாயிரக் கணக்கான ஒலி ஒளி சக்திகளின் சங்கமம் ஆகும். மேலோட்டமாக இதை சக்தி பீஜாட்சரம் என்று அழைப்பதில் தவறு கிடையாது. எனவே ஓம் ஹம் என்பது சிவனும் சக்தியும் ஒருங்கிணைந்த அர்த்தநாரீஸ்வர அட்சரமாக பொருள்கொள்ளப்படுகிறது.
இந்த ஹம் பீஜாட்சர சக்திகளைப் பற்றி விஸ்தாரமாக விவாதிப்பதை விட இந்த பீஜாட்சர சக்திகளை எப்படி நாம் இக பர சுகங்களை அடைய பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்வதே சிறப்பாகும்.
பலரும் ஏதாவது ஒரு பாட்டை வாய் திறந்து பாடாமல் மூக்கினால் மட்டும் ம் ம் என்று ஒலிப்பார்கள். Nasal tone என்ற இந்த சப்த த்வனியை நாம் வழக்கில் ஹம்மிங் என்று சொல்வதும் உண்டு.
இவ்வாறு வேத மந்திரங்களை, பீஜாட்சர ஒலிகளை ஹம் செய்வதையே ஹம் ஸ்வர தியானம், ஹம் ஸ்வர யோகம் என்று அழைக்கிறோம்.
பொதுவாக ஒரு பாடலைப் பாடும் முன் பாடகர்கள் அந்த பாட்டின் ராகத்தை ஹம் செய்து பாட்டின் ராக ஆலாபனையை ஒத்திகை பார்த்துக் கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட ராகத்தில் உள்ள ஆரோஹண அவரோஹண ஸ்வரங்களை இவ்வாறு பாடுவதும்  ஹம் ஸ்வர யோக சக்திகளைக் கொடுக்கும்.
வாயால் பாடுவதற்கும் ஹம் செய்வதற்கும் என்ன வித்தியாசம் ? காற்றில் நேர்மறை, எதிர்மறை (positive. negative ions) என்று இருவகை கூறுபாடுகள் உண்டு. இவற்றில் எதிர்மறை காற்று சக்தி கூறுபாடுகள் நமக்கு சக்தியை ஊட்டி நன்மை அளிக்கும் தன்மை உடையன. வாயால் பாடும்போது காற்றை இவ்வாறு கூறிட்டு பிரிப்பது கிடையாது. ஆனால், ஹம் செய்யும்போது காற்றுக் கூறுபாடுகள் தோற்றுவிக்கப்பட்டு எதிர்மறை காற்று சக்தி கூறுபாடுகள் நம் உடலில் பெருமளவில் சேர்வதால் நமக்கு இது புத்துணர்சியை அளிக்கின்றது.

ஸ்ரீநறுங்குழல் நாயகி அம்மன்
திருவெறும்பூர்

தூக்க மாத்திரை போட்டுக் கொண்டால்தான் தூக்கம் வரும் என்ற நிலையில் உள்ளவர்கள் இவ்வாறு இறைப் பாடல்களை ஹம்மிங் செய்து வந்தால் விரைவிலேயே அவர்கள் நிம்மதியான உறக்கத்தைப் பெற முடியும். அப்போதுதான் அவர்கள் ஹம் ஸ்வர யோகத்தின் பலனைக் கைமேல் உணர்ந்து பயன்பெற முடியும்.
இந்த ஸ்வர யோக சக்திகள் எப்படி யோகத்தை, தியானத்தை மேம்படுத்தும் என்பதை சற்று ஆராய்வோம்.
தியானம் என்பது மனம், வாக்கிற்கு அப்பாற்பட்ட அவரவர் தாங்களாகவே உணரக் கூடிய ஒரு நிலை. ஆனால், ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலைகளில் தியானம் என்பது அலைபாயும் மனம் ஒருமுகப்பட்டு புத்தியில் அடங்குவதாகவும், புத்தி உள்ளத்தில் அடங்குவதாகவும், உள்ளம் ஆன்மாவில் அடங்குவதாகவும் கூறுவதுண்டு.
இவ்வாறு உள்ளத்தால் உணரப்பட்ட மனம் ஆன்மாவில் லயம் ஆக வேண்டுமானால் அது முதலில் ஹம் என்ற பீஜாட்சர த்வனியில் லயம் ஆக வேண்டும். பின்னர் அந்த ஹம் தியானம் ஓங்கார தியானத்தில் லயம் ஆகும். ஓங்கார தியானத்தில் நான் எனது என்ற நிலைகள் மறைய அதன் பின் சித்திப்பதே உண்மையான தியான நிலையாகும்.
இதையே ஹட யோகிகளும் ஸோஹம் என்ற தியான நிலையில் ஆரம்ப நிலையாக நம் மூச்சுக் காற்று எழுப்பும் ஸோ ஹம் என்ற ஒலியை தியானித்து பின்னர் அதன் ஹம் பீஜாட்சர ஒலி ஒளி சங்கமத்தை உணர்த்து, பின்னர் ஹம் த்வனிக்கு ஆதாரமான பிராண சக்தியை உணர்ந்து அந்த பிராணனை ஆத்மாவில் லயமாக்கும் தியான நிலையை அடைகிறார்கள்.
இந்த விளக்கங்கள் அனைத்தும் சாதாரண கலியுக மக்களுக்கு பெரிய குழப்பத்தை அளிப்பதால் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக பாடுபடும் சித்தர்கள் ஒரு எளிய ஹம் தியான முறையை அளித்துள்ளனர்.
அது என்ன ?
இறைவனை உணர்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர் போன்ற இறைத் தூதுவர்களின் பன்னிரு திருமுறைப் பாடல்களை ஹம் ஸ்வர யோகத்தில் லயிக்கச் செய்தால் அதாவது இந்தப் பாக்களை ஹம்மிங் செய்து வந்தால் நாளடைவில் ஹம் தியான நிலையும் ஓங்கார தியானமும் சித்தி ஆகும் என்பதே சித்தர்கள் சுட்டிக் காட்டும் எளிய ஹம் தியான முறையாகும்.

புல்லாங்குழல், வயலின் போன்ற இசைக் கருவிகள் எளிதில் ஹம் பீஜாட்சர சக்திகளை எழுப்பக் கூடியவை. இக்காரணம் பற்றியே கிருஷ்ண பகவான் புல்லாங்குழலை இசைத்து கோபியர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
பொதுவாக புல்லாங்குழலில் எட்டு துளைகளும் வாய் வைத்து ஊதுவதற்கு வசதியாக ஒரு துளையும் என மொத்தம் ஒன்பது துளைகள் இருக்கும். ஆனால், கிருஷ்ண பரமாத்மா கானம் எழுப்பிய புல்லாங்குழலில் எட்டு துளைகளே இருந்தன. காரணம் தன்னுடைய வாயினால் ஒலியை எழுப்ப வேண்டிய அவசியம் கிருஷ்ண பரமாத்வுக்கு கிடையாது.
மேலும் அந்த சாதாரண மனித நிலையிலும் பூரண அவதாரமான பெருமாள் மூர்த்தி திகழவில்லை அல்லவா ? கிருஷ்ண பரமாத்வாவின் வேணு கானமாகத் திகழ்ந்தது, கோகுல புனித பூமியில் பெருகி நிறைந்தது வெறும் காற்று ஒலி கிடையாது அது கோகுல கண்ணனின் வேணு கீதம் அது பெருமாளின் ஆத்ம கீதம், கண்ணனின் புல்லாங் குழலில் ஒலித்தது ஹம் என்ற பீஜாட்சர நாதமே. இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். ஏன் கிருஷ்ண பரமாத்மா ஓம் என்ற ஓங்கார பிரணவத்தை ஒலிக்கவில்லை. பரமாத்மா சற்றே நினைத்திருந்தாலும் ஆனாய நாயனார் புல்லாங்குழலில் நமசிவாயத்தை ஒலித்தது போல் தன்னுடைய புல்லாங்குழலில் பெருமாள் ஓங்காரத்தை இசைத்திருக்கலாம்.
அவ்வாறு பெருமாள் ஓங்கார நாதத்தை எழுப்பியிருந்தால் கோபியர்கள் அனைவரும் கிருஷ்ண பரமாத்வுடன் ஒன்றிப் போய் விடுவார்கள். அதன் பின்னர் கோபியர்களும் கிடையாது கோகுலமும் கிடையாது கிருஷ்ண லீலைகளும் தொடராது.
எனவே கிருஷ்ண லீலைகள் தொடர வேண்டும் என்ற சுவையை ஏற்படுத்தவே எம்பெருமான் ஹம் பீஜாட்சர ஒலிகளை இசைத்து கோபியர்களை ஆட்கொண்டார். ஏற்கனவே நாம் கூறியதுபோல மேலோட்டமான நிலையில் ஹம் பீஜாட்சரம் என்பது சக்தி பீஜாட்சரம் என்று அழைக்கப்படுவதால் வேணு கீதத்தில் மயங்கிய கோபியர்கள் அனைவரும் சிவனுடன் இணைந்த சக்திகளாய் பரமனுடன் இணைந்த பக்தர்களாய் மாறி பக்தி நிலையின் உன்னத சிறப்பை பெற்றனர். இதையே ராச லீலை என்று கிருஷ்ணபகவானின் பாகவத லீலைகளாகப் புகழ்ந்து பாராட்டுகிறோம்.
இங்கு வேணு என்பது வெறுமனே மூங்கில் என்ற அர்த்தம் கொள்ளாது வேணு என்றால் தன்னுடைய திருமேனியையே புல்லாங்குழலாய் மாற்றி அதில் வாயினால் ஊதாது அதில் தன்னுடைய ஆத்மாவையே இசைத்தார் மக்களைக் காக்கும் பெருமாள் என்பதே வேணுகோபாலன் என்ற நாமத்தின் பொருளாகும். இத்தகைய சிறப்பை பெருமாள் பெற்ற தலமே திருஅண்ணாமலையாகும்.
திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் முதல் பிரகாரத்தில் இன்றும் பக்தர்களுக்கு ஹம் என்ற பீஜாட்சர சுவையை ஊட்டி வரும் வேணுகோபாலப் பெருமாள் மூர்த்தியை வணங்கி பசு வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து பக்தர்களுக்கு தானமாக அளித்து வந்தால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். மனக் குழப்பங்கள் அகலும்.
இவ்வாறு புல்லாங்குழல், வயலின் இசைக் கருவிகளால் வாசிக்கப்பட்ட தேவார திருவாசகப் பாடல்களைக் கேட்டு ஹம் செய்து வந்தால் ஹம் ஸ்வர தியான யோக நிலை எளிதில் சித்திக்கும். தொடர்ந்த பயிற்சியால் ஓங்கார தியான நிலை மலரும்.
நமது குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளிய பன்னிரு திருமுறை தேவார திரட்டுப் பாடல்களை வயலின் இசைக் கருவியில் எளிய சந்த நடையில் அமைத்து இறையன்பர்களின் நலம் வேண்டி இங்கு அளித்துள்ளோம்.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தப் பாடல்களின் வயலின் இசையை வெறுமனே கேட்பதால் மட்டும் எந்தவிதமான தியான நிலையும் ஏற்படாது, சித்திக்காது. இந்தப் பாடல்களைக் கேட்டு அதை ஹம் செய்துப் பயின்று வந்தால்தான் ஹம் ஸ்வர தியான நிலை மலரும்.
இந்த ஹம் ஸ்வர யோக சக்திகளை எளிதில் கிரகிக்கக் கூடிய சக்திகள் பெற்றதே எறும்புகள் ஆகும். எறும்புகளின் தலைமை பீடமான திருவெறும்பூர் திருத்தலத்தில் ஈசனை தினமும் தரிசித்து இப்பிரபஞ்சத்தில் ஹம் ஸ்வர சக்திகளை நிரவி வரும் பிப்லாத மகரிஷியே முதன் முதலில் ஹம் தியான யோகத்தை எளிமைப்படுத்தி மக்களுக்கு அளித்த பெருந்தகையாவார்.
சஷ்டி திதிகளிலும், சனிக் கிழமைகளிலும் திருவெறும்பூர் சிவத்தலத்தில் நாட்டுச் சர்க்கரை கோதுமை ரவை கலந்த உணவை இட்டு வந்தால் ஹம் தியான சக்திகள் மலரும், குடும்ப ஒற்றுமை பெருகும்.
நாட்டுச் சர்க்கரைக்கு அமிர்த சக்திகளை ஹம் பீஜாட்சர சக்திகளாக மாற்றும் அற்புத சக்தி உண்டு. இதனால் அபிஷேகத்திற்காக பஞ்சாமிர்தம் தயார் செய்யும்போது தேன், கல்கண்டு போன்ற பல இனிப்பு திரவியங்களை சேர்த்தாலும் கட்டாயம் நாட்டுச் சர்க்கரை கலந்து பஞ்சாமிர்தம் தயார் செய்ய வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது.
இடியாப்பத்துடன் நாட்டுச் சர்க்கரை கலந்து தானம் செய்வதும், நாட்டுச் சர்க்கரை சேர்ந்த பால் தானம் செய்வதும் கடன் நிவாரணமும், தோல் நோய் நிவாரணத்தையும் பெற்றுத் தரும்.
பிப்லாத மகரிஷி ஹம் தியான யோகத்தை உலகிற்கு அர்ப்பணித்து திருப்பணியை ஆற்றிய தலமே திருச்சி சோமரசம்பேட்டை அருகில் அல்லித்துறையில் அமைந்துள்ள ஸ்ரீபார்வதீஸ்வரர் சிவத்தலமாகும்.
இவ்வாறு பிப்லாத மகரிஷி ஹம் தியான யோக முறையை உலகத்தவர்க்கு அர்ப்பணிக்கும் முன் இந்த யோகம் பற்றிய இரகசியங்களை அவர் உணர்ந்த தலமே திருஎறும்பீஸ்வரர் திருத்தலமாகும்.

பிப்லாத மகரிஷி திருஎறும்பூர் திருத்தலத்தில் தவமியற்றக் காரணம் என்ன ?
திருவெறும்பூரில் எழுந்தருளியிருக்கும் இறைவி ஸ்ரீநறுங்குழல் நாயகி என்ற நாமத்துடன் எழுந்தருளி உள்ளாள் அல்லவா ? நறுங்குழல் என்றால் நறுமணம் உடைய கூந்தல் என்று பொருள். நறுமணம் உடைய கூந்தலே ஹம் என்ற பீஜாட்சர சக்திகளை கிரகிக்கும் இயல்புடையது. இது கூந்தலின் இயற்கையான தன்மை.
இந்த இயற்கையான கூந்தலின் சக்தியை பெருக்க உதவுவதே மல்லிகை மலர்களாகும். மல்லிகை மலர்களுக்கு ஐஸ்வர்ய சக்திகளும், ஐஸ்வர்ய விருத்தி சக்திகளும், மங்கள மாங்கல்ய விருத்தி சக்திகளும் உண்டு என்பதை நாம் பலமுறை விளக்கி வந்துள்ளோம்.
மேலும் ஒவ்வொரு மலருக்கும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பீஜாட்சர சக்திகளையும், சக்தி கூறுகளையும் விருத்தி செய்யும் தன்மை உண்டு. உதாரணமாக, வில்வத்திற்கும் துளசிக்கும் பீஜாட்சர சக்திகளை கிரகிக்கும் சக்திகளும் அவற்றை விருத்தி செய்யும் சக்திகளும் உண்டு.
ஆனால் தும்பைச் செடிக்கு ஓம் பீஜாட்சரத்தின் சில சக்திக் கூறுகளை பிரபஞ்சத்தில் விநியோகிக்கும் சக்திகளே உண்டு.
இவ்வாறு மக்களுக்கு அற்புத சேவையாற்றும் மலர்களில் மல்லிகை உன்னத இடத்தைப் பெற்றமைக்கான தெய்வீக இரகசியங்களை சற்றே உணர முற்படுவோம்.
மலர்கள் பகலில் மலர்ந்து மாலையில் மணம் பரப்பி மறுநாள் மறைந்து விடுவதாகவே எண்ணுகிறோம். ஆனால், ஒரு நாள் பொழுதில் அவை ஆற்றும் அற்புதங்களோ கோடி கோடி.
பொதுவாக மணமுள்ள எல்லா மலர்களுமே ஒவ்வொரு யாமத்திலும் ஒவ்வொரு விதமான ஜீவ சக்திகளையும் ஒலி ஒளி பீஜாட்சர சக்திகளை வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கும். இவ்வாறு யாமம் அல்லது ஜாமம் என்ற மூன்று மணி நேரத்தில் மாறும் மலர்களின் தெய்வீக சக்தியை மக்கள் பெறுவதற்காக சிவராத்திரி போன்ற இறை மூர்த்திகளுக்கு உரிய சிறப்பான தினங்களில் ஒவ்வொரு யாமத்திலும் ஒரு குறிப்பிட்ட மலரால் அர்ச்சிக்கும் முறை ஏற்பட்டது.

ஹம் சக்திகள் பொலியும்
திருவெறும்பூர் படிக்கட்டுகள்

மல்லிகையை எடுத்துக் கொண்டால் ஒரு நாள் இரவின் முதல் யாமமான மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணிவரையிலான நேரத்தில் அதன் மணம் பூரண நிலையை அடையும். அடுத்த யாம நேரமான இரவு ஒன்பது மணி முதல் 12 மணிக்குள் அது தன்னுடைய தேவதா சக்திகளை, நறுமண சக்திகளை உலகிற்கு தாரை வார்த்து அளிக்கும். மூன்றாம் யாமமான நள்ளிரவு முதல் மூன்று மணிவரை வர்ஷ தியானம் என்ற யோக நிலையில் இலயித்து விடும். நான்காம் யாமமான விடியற்காலை மூன்று மணி முதல் ஆறு மணிக்குள் அதன் தியான நிலை பூரணம் அடைந்து தன்னளவில் முக்தி நிலையை அடைந்து விடும்.
எனவே மல்லிகையை இறைவனுக்கு முதல் யாமத்தில் சூட்டும்போது அது இறைவனுக்கு தன்னுடைய பயனுள்ள வாழ்க்கைப் பகுதி முழுவதையும் அளிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இரண்டாம் யாம நேரத்தில் மல்லிகை தன்னுடைய சக்திகளை உலகத்திற்கு தாரை வார்த்து அளிப்பதால் மல்லிகை பூச்சரங்களை இறைவன் பூஜைக்காக அர்ப்பணித்தவர்கள் அதன் பலன்களை அப்போது பெற்று விடுகிறார்கள். மூன்றாம் யாம நேரத்தில் மல்லிகை யோக நிலை பூணும்போது இந்த உலகிற்கு உள்ள இயல்பான லௌகீக எண்ணங்கள் மறைந்து இறைநிலை வந்து வாய்க்கும். நான்காம் யாமத்தில் மல்லிகை முக்தி நிலையை அடைந்து விடுகிறது.
முக்தி என்பது ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஒவ்வொரு விதத்தில் அமையும். எறும்பிற்கு கிடைக்கும் முக்தி நிலை வேறு. யானைக்கு கிடைக்கும் முக்தியின் தன்மை வேறு. அது போல ஒரு மனிதன் பெறும் முக்தி நிலையை ஒரு மகான் பெறும் முக்தி நிலைக்கு ஒப்பிடவே முடியாது. அதனால்தான் தன்னளவில் மல்லிகை முக்தி நிலை அடையும் என்று கூறுகிறோம்.
ஆனால், முக்தி நிலையில் எல்லா ஜீவ ராசிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது பூரணம் என்பதே எல்லா ஜீவ ராசிக்கும் பொதுவான ஒன்று. அதாவது ஒரு பூவோ, யானையோ, மனிதனோ, மகானோ முக்தி அடைந்து விட்டான் என்றால் அது பூ, யானை, மனிதன், மகான் தன்னுடைய நிலையில் பூரணத்துவத்தை அடைந்து விட்டான் என்பதையே குறிக்கிறது.
எனவே ஒரு மகான் முக்தி அடைந்து விட்டான் என்றால் அவன் இறக்கவில்லை, அவன் மகான் என்ற நிலையின் பூரணத்துவத்தை அடைந்து விட்டான், இனி அவன் தன் பூரண சக்திகளை அனைவருக்கும் அளிக்கும் உன்னத நிலையைப் பெற்று விட்டான் என்று அவனுக்கு ஜீவ சமாதியை எழுப்புகிறோம். அதாவது ஜீவ சமாதியில் மகான் ஒருவரின் பூரண சக்திநிலை நிலவுகிறது என்பது இதன் பொருள்.
அது போல நான்காம் யாமத்தில் மல்லிகை பூரணம் அடைந்து விட்டதால் அதை நிர்மால்ய மலர்கள் என்று அழைக்கிறோம். மலம் என்றால் எஞ்சி நிற்கும் கசடு, அழுக்கு என்று பொருள். நிர்மால்யம் என்றால் அப்பழுக்கற்ற தூய்மை அடைந்த மலர்கள் என்று நிர்மால்யப் பூக்களுக்கு பொருள்.
இவ்வாறு அப்பழுக்கற்ற நிலையில் இறைவன் திகழ்வதால் முதன் முதலில் இறை மூர்த்திகளை விடியற்காலையில் தரிசிக்கும்போது அது நிர்மால்ய தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் எப்போது இறைவன் அழுக்குடன் இருந்தான் இப்போது நிர்மால்யம் பெற்றுத் திகழ்வதற்கு ?
இரவு முழுவதும் நிர்மலமான மனதை உடைய தேவர்கள், யோகிகள், சித்தர்கள், மகான்களின் பூஜையால் இறைவன் நிர்மால்ய சக்திகளுடன் திகழ்வதால்அவன் நமது உள்ள அழுக்கை நீக்கும் பாங்கில் விடியற்காலையில் நிர்மால்ய தரிசனத்தை அளிக்க வல்லவன் என்ற பொருளிலியே இறை மூர்த்திகளின் நிர்மால்ய தரிசனம் அமைந்துள்ளது.
இவ்வாறு தன்னளவில் முக்தி அடைந்த நிர்மால்ய மலர்களை, முக்தி பெற்ற மலர்களை ஆறுகளில், குளங்களில் சேர்ப்பதால் ஆறுகள், நீர் நிலைகள் தூய்மை பெறுகின்றன. இத்தகைய திருப்பணிகளை நிறைவேற்றுபவர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், கடன் தொல்லை போன்ற குறைகள் தீர்வு பெறுகின்றன.

சங்கம இரகசியங்கள்

முதல் யாமத்தில் பூரண சக்திகளுடன் விளங்கி இரண்டாம் யாமத்தில் மங்கள மாங்கல்ய சக்திகளை மக்களுக்கு தாரை வார்த்து அளிப்பதால்தான் இறைவனுக்கு சூட்டிய மல்லிகை மலர்களை சுமங்கலிகள் சூடிக் கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு தீர்கமான மங்கள மாங்கல்ய சக்திகள் கிடைப்பதுடன் அற்புதமான ஒழுக்கமான சந்ததிகளும் வரப் பிரசாதமாகப் பொலிந்தன.

அக்காலத்தில் சாந்தி முகூர்த்தம் என்ற தம்பதிகளின் தெய்வீக சங்கம யோகத்தை இரண்டாம் யாமத்தில்தான் நிகழ்த்துவார்கள். இதன் பின்னால் உள்ள தெய்வீக இரகசியங்கள் இப்போது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கி விடும்.
எனவே மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்ப்படும் எந்த சாதாரண காரியமாக இருந்தாலும், மகத்தான காரியமாக இருந்தாலும் நல்லோர்கள், பெரியோர்கள் சுட்டிக் காட்டிய முறையில் மேற்கொண்டால் அதனால் நமக்கு நற்பலன்களே கிட்டும் என்பது மல்லிகையின் மகத்துவம் நமக்குக் கூறும் பாடமாகும்.
அதோடு மட்டுமல்லாமல் தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கை நன்முறையில் அமைய நமது பெரியோர்கள் எத்தனையோ அற்புத வழி முறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள்.
முற்காலத்தில் வேத மந்திரங்களை ஓதியே திருமணங்களை நடத்தி வந்தார்கள். இவ்வாறு திருமண வைபவங்களின் போது நடக்கும் சடங்குகள் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவைகளாகவும் தனி மனித மற்றும் சமுதாய நலன்களை உத்தேசித்தே அமைந்திருக்கும். இவ்வாறு திருமணத்திற்குப் பின் தம்பதிகள் தாங்கள் குடியேறும் இல்லத்தில் சில குறிப்பிட்ட ஹோமத்தை நிகழ்த்தும்போது மாலை ஆறு மணி அளவில் நிகழ்த்துவர்.

திருவெறும்பூர் திருத்தலத்தை முழங்கால் இட்டபடியே வலம் வந்து வணங்குவதால் கம்ப்யூட்டர் அறிவு விருத்தியாவது மட்டுமன்றி குரு நம்பிக்கையும் பல்கிப் பெருகும் என்பது உண்மையே. ஆனால், முழங்காலிட்டு வலம்வர முடியாத நிலையில் உடல் வியாதிகளோ, சூழ்நிலைகளோ அமைந்து விட்டால் அத்தகையோர் என் செய்வது என்று ஒரு முறை நம் சற்குருவை வினவியபோது நம் சற்குரு அளித்த பதிலோ, “உண்மையாகவே உன்னால் அவ்வாறு முழங்கால் பிரதட்சிணம் வர முடியாவிட்டால் இங்கு அளித்துள்ள பொருட்களை வறுத்து நன்றாக அரைத்து பொடி செய்து அவற்றை எறும்புகளுக்குத் தீனியாக திருவெறும்பூர் திருத்தலத்தில் இட்டு வருவதும் முழங்கால் பிரதட்சிணத்திற்கு இணையான பலனை அளிக்கக் கூடியதே,” என்று மனமுவந்து அருளினார்கள்.
1. கேழ்வரகு 2. கோதுமை 3. உளுந்தம்பருப்பு 4. துவரம்பருப்பு 5. பொட்டுக்கடலை 6. நிலக்கடலை அல்லது வேர்க்கடலை (நெய்யில் வறுத்து பொடி செய்து சேர்க்கவும்) 7. உப்பு (தேவையான அளவு) 8. சோன்பப்டி என்ற இனிப்பு வகை 9. பால்கோவா (பசும்பாலில் செய்வது சிறப்பே)

இதுவரை மணமகனின் வலது புறத்தில் அமர்ந்திருந்த மணப்பெண் இப்போது மணமகனின் இடது புறத்தில் அமர்வாள். இவ்வாறு அமர்ந்து பிரவேச ஹோமம் இயற்றும்போது ”தாம் பூஷந் சிவதமா ... ” போன்ற சில வேத மந்திரங்களை தம்பதிகள் ஓது வேண்டும். அப்போது இந்த ஹோமத்தில் ஸ்ரீவாமநீஸ்வர என்ற ருத்ர மூர்த்தி ஆவாஹனம் ஆவார் என்பது இதுவரை நீங்கள் அறியாத சித்தர்கள் மட்டுமே அறிந்த அற்புத தெய்வீக இரகசியம் ஆகும்.
அவ்வாறு ஹோம அஹூதியைப் பெறும் ஸ்ரீவாமநீஸ்வர ருத்ர மூர்த்தி வாமதேவம் என்ற ருத்ர சக்தியை சந்ததிகளுக்குப் பிரசாதமாக அளிக்கிறார். ருத்ர சக்திகள் பொலியும் இந்த அக்னி சக்தியே கற்புக் கனல், சுமங்கலி சக்தி என்று போற்றப்படுகிறது.
முதன் முதலில் அக்னியைப் பெற்ற அக்னி ஹோத்ரியானவன் அதைத் தன் வாழ்நாள் முழுவதும் அணையாது காப்பாற்ற வேண்டும் என்ற தெய்வீக நியதி உள்ளது போல் தம்பதிகள் வாமதேவம் என்ற அக்னி சக்தியை தங்கள் வாழ்நாளின் இறுதி நாள் வரை காப்பாற்ற வேண்டும் என்பதே உண்மையான தாம்பத்ய நியதி ஆகும்.
வாமதேவம் என்பது ருத்ர அக்னி சக்தியாக இருப்பதால்தான் சுமங்கலிகளின் தவப் பலனுக்கு ஈடான ஒரு சக்தி உலகில் எங்கும் கிடையாது, சுமங்கலிகளின் சாபத்தை எவராலும் மாற்ற முடியாது என்கிறோம். எம்பெருமானின் ருத்ர சக்திக்கு ஈடு இணை ஏது ?
ஆனால், இந்த சுமங்கல ருத்ர சக்தி ஆண்களுக்கும் உண்டு என்பதை தற்போதைய சமுதாயம் மறந்து விட்டது ஒரு அதிசயமே. எனவே கற்பு என்பது ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவானதே. அது தம்பதிகள் இருவரும் சேர்ந்து பராமரிக்க வேண்டிய ஒரு ருத்ர அக்னி சக்தி என்பதே வேதத்தாலும் சித்தர்களாலும் பறைசாற்றப்படும் உண்மையாகும்.
ஆனால் தற்காலத்தில் நிறைவேறும் திருமணங்களில் எந்த ஹோமமுமே சரியான முறையில் தம்பதிகளால் நிறைவேற்றப்படுவதில்லை. அனைத்து திருமண மந்திரங்களையும் திருமணத்தை முன்னின்றும் நடத்தும் சாஸ்திரிகளே ஓதுவதால் அதனால் விபரீதமான எதிர் விளைவுகளே ஏற்படுகின்றன.
எனவே சித்தர்கள் கூறும் முறையில் இறைச் சன்னிதிகளில் சுயம்பு மூர்த்திகளின் திருவருள் முன்னிலையில் திருமண வைபவங்கள் நிகழும்போது இந்த வாமதேவ ருத்ர சக்தி சிவ ருத்ர பிரசாதமாக தம்பதிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதை விடச் சிறந்த பேறு எது ?
திருத்தலங்களில் மாங்கல்ய தாரணம் நிறைவேறிய பின் மணமகன் மணமகளை தனது வலப் புறத்தில் வைத்து தன்னுடைய வலது மோதிர விரலால் மணமகள் நெற்றியில் குங்குமத்தை இடுவான். அத்தருணத்தில்தான் சிவ பிரசாதமாக வாமதேவ ருத்ர சக்தி தம்பதிகளுக்கு அளிக்கப்படுகிறது.
வேறு எந்த மார்கத்தாலும் இந்த வாமதேவ ருத்ர சக்தியைப் பெற முடியாது. வெறும் கற்புக்கு சாட்சியாக நிற்பது மட்டும்தான் ருத்ராக்னி கிடையாது. உத்தம சந்ததிகளை உருவாக்குவதே வாமதேவ ருத்ராக்னி சக்தியாகும். இதில் எந்தவித ஐயப்பாடும் வேண்டாம்.
எனவே பிரவேச ஹோமம் என்பது தம்பதிகள் திருமணத்திற்குப் பின் முதன் முதலில் புது வீட்டிற்கு குடிபோகும் வைபவம் என்று மேலோட்டமாக பொருள் கொள்ளாது அத்தம்பதிகள் வாமதேவம் என்னும் ருத்ராக்னி சக்தியை இறைப் பிரசாதமாகப் பெறும் அற்புத தெய்வீகச் சடங்கே என்பது இந்த ரிக் வேத மந்திரங்களின் உட்பொருளை ஊன்றிக் கவனித்தால் பெருகும்.
இவ்வாறு ஹோமங்களை முறையாக நடத்தி வேத மந்திரங்களை தம்பதிகள் தாமே ஓதி அல்லது திருச்சன்னதிகளில் மாங்கல்ய தாரண வைபவத்தை நிகழ்த்தி வாமதேவ ருத்ர சக்திப் பேணுவதால் மட்டுமே உத்தம சந்தானங்களைப் பெற முடியும்.
அதை விடுத்து ஏனோ தானோ என்று திருமண வைபவங்களை நிகழ்த்தி கற்பை காற்றில் பறக்க விட்டு விட்டு ஊதாரித்தனமான, ஒழுக்கமற்ற, பண்பற்ற பிள்ளைகளாக குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அவர்களை நிந்திப்பதால் பயன் என்ன ? தவறு யாருடையது ?
உத்தம சந்தானங்களை உருவாக்குவதுடன் குடும்ப ஒற்றுமையைப் பேணுவதும் வாமதேவ அக்னியின் ருத்ர சக்தியாகும்.
நாம் எவ்வளவு தவறு செய்தாலும் நம்முடைய தவறைப் பொறுத்து நமக்கு நல்ல பலனையே அளிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ள சித்தர்கள் தம்பதிகளின் இயலாமையை அறிந்து எளிமையாக இந்த வாமதேவ ருத்ராக்னி சக்தியைப் பெறும் முறையை அருளியுள்ளார்கள்.
தம்பதிகள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் நித்திய சுபஹோரை நேரமான மாலை ஆறு மணி அளவில் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகத்திய ஆஸ்ரமம் எதிரே அமைந்துள்ள சிவசக்தி ஐக்ய தரிசனம் பெறுவதாலும் வாமதேவ ருத்ராக்னி சக்தியைப் பெறலாம்.

இரண்டாவதாக, சஷ்டி விரதத்தின்போது இத்தகைய வாமதேவ ருத்ராக்னி சக்திகள் முருகவேளால் கந்தப் பிரசாதமாக அளிக்கப்படுகின்றன என்பதும் ஒரு சரவணபவ இரகசியமாகும். ருத்ர ஜோதியில் தோன்றிய சிவ ஜோதிதானே கந்தவேள்.
அதே போல முருகப் பெருமானின் அவதாரமாகத் தோன்றிய ஸ்ரீபன்றிமலை சுவாமிகளின் ஜீவாலயம், வருண இஷ்ட திகம்பரராக ருத்ராக்னி பொலியும் கசவனம்பட்டி சித்தரின் ஜீவசமாதி, சிவசக்தி ஐக்ய பிரசாதமாக திருஅண்ணாமலை ஈசனாலேயே இப்புவிக்கு அளிக்கப்பட்ட திருவாரூர் ஸ்ரீதட்சிணா மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி போன்ற ஜீவாலயங்களில் மாலையில் ஆறு மணி அளவில் வழிபட்டு அற்புத பலன்களைப் பெறலாம்.
சென்னை நுங்கம்பாக்கம் சிக்னல் அருகில் உள்ள ஸ்ரீபன்றிமலை சுவாமிகளின் ஜீவாலயம் நமசிவாய மடம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இன்றும் எத்தகைய எதிர்வினை சக்திகளையும், பகைமை, பில்லி சூன்ய சக்திகளையும் முறியடிக்கும் திருத்தலம்.
இதன் பின்னால் உள்ள ஜோதிட விதிகளில் ஒன்றைப் பற்றி காண்போம். பொதுவாக, திருமணத்திற்கு முன் மணமகன், மணமகளின் ஜாதக அம்சங்களைப் பொருத்திப் பார்த்த பின்னரே திருமணங்களை நிகழ்த்துவது சிறப்புடையது என்றாலும் பல சந்தர்ப்பங்களில் இது நிறைவேறாமல் போய்விடுவது உண்டு. இந்தக் குறைபாட்டை ஓரளவு நிவர்த்தி செய்வதற்காகவே பிரவேச ஹோமம் என்ற ஹோமத்தை மாலை ஆறு மணி அளவில் நிகழ்த்துவார்கள். ஒரு நாளைய மாலை ஆறு மணி என்பது அந்த நாளை ஆட்சி செய்யும் கிரக ஹோரைக்கு நட்புடையதாகவே அமையும்.
அதாவது,
ஞாயிற்றுக் கிழமை குரு ஹோரை நட்பு
திங்கட்கிழமை சுக்கிர ஹோரை சமம்
செவ்வாய்க் கிழமை சனி ஹோரை சம்ம்
புதன் கிழமை சூரிய ஹோரை நட்பு
வியாழக் கிழமை சந்திர ஹோரை நட்பு
வெள்ளிக் கிழமை செவ்வாய் ஹோரை சமம்
சனிக் கிழமை புதன் ஹோரை நட்பு
என்ற நிலையிலேயே அமையும். அதனால் தம்பதிகளுக்கிடையே அடிப்படையான ராசிப் பொருத்தங்கள் அமையா விட்டாலும் கூட இறைவனை வேண்டி இந்த ஹோமங்களை நிகழ்த்தி தம்பதிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அரும்பாடு பட்டார்கள்.

ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள்
ஜீவாலயம் கசவனம்பட்டி

எனவே ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு ஹோமம் நிகழ்த்தும்போது மணமகனோ மணமகளோ சிம்ம ராசியைச் சேர்ந்தவராக இருந்தால் சிம்ம ராசிக்கு அதிபதியான சூரிய பகவானும் அப்போதைய ஹோரையின் அதிபதியான குருவின் நட்பு பாவத்துடன் திகழ்வதால் இது தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பது ஜோதிட விதி.
ஒருவேளை அவர்கள் சிம்ம ராசி என்று அல்லாது வேறு ராசியில் பிறந்தவர்காளகவும் இருக்கலாம் அல்லவா ? அப்படி இருந்தாலும் பெரியோர்கள் சுட்டிக் காட்டிய முறையில் அவர்கள் தினமும் மாலை ஆறு மணிக்கு விளக்கேற்றி இறைவனை வழிபட்டு வந்தால் நிச்சயம் அவர்களுடைய ராசிக்கு உரிய அதிபதியுடன் நட்பு பாவம் தோன்றி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் அல்லவா ?
எதற்காக தம்பதிகளுடைய ஒற்றுமைக்காக இந்த அளவு பெரியோர்கள் பாடுபடுகிறார்கள். ஒற்றுமையான தம்பதிகளால் உருவாவதுதான் சாந்தமான சமுதாயம். இதுவே உலக அமைதிக்கும் வழிகாட்டும்.  மேலும் ஒற்றுமையான தம்பதிகள்தான் உத்தம வாரிசுகளை உருவாக்க முடியும் என்பதே சத்தியமான உண்மை.

வராஹமிகிரரின் சூத்திரப்படி சந்திர பகவான் கணவனுடைய ராசியிலிருந்து 3, 6, 10, 11 என்ற உபசய ராசிகளில் சஞ்சரிக்கும்போது தம்பதிகளின் சங்கமம் குரு பார்வையுடன் நிகழ்ந்தால்தான் வாரிசுகள் உருவாகும் என்று விதித்துள்ளார். அவ்வாறு சந்திர பகவானின் சஞ்சாரம் 3, 6, 10, 11 என்ற உபசய ராசிகளில் இல்லாவிட்டாலும் கூட பலமான குருவின் பார்வை உத்தம சந்தானங்களை உருவாக்க முடியும் என்பதும் ஜோதிட விதியே.

தம்பதிகளிடையே தோன்றும் மன ஒற்றுமையே பலமான குருவின் பார்வைக்கு சமமானதாக சித்த கிரந்தங்களில் சங்கம இரகசியங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இதன் பின்னால் ஆயிரமாயிரம் இரகசியங்கள் உண்டு. அவற்றைத் தக்க குருமார்கள் மூலமாகவோ, குலப் பெரியோர்கள் மூலமாகவோ அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சாஸ்திரங்களின் மேலும் இறைவனின் மேலும் அவ நம்பிக்கையே தோன்றும் என்பதும் உண்மையே.

சஷ்டி தரும் சந்தானம்

இவ்வாறு உத்தம சந்தானங்களை பெறுவதற்கும் குடும்ப ஒற்றுமையை விருத்தி செய்வதற்கும் பெரியோர்களால் அருளப்பட்டதே சஷ்டி விரதமாகும். ”சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”, என்று  குழந்தைகளைப் பெறுவதற்காக அனுஷ்டிக்க வேண்டியதே சஷ்டி விரதம் என்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அதைத் தாண்டி நாம் சஷ்டி விரதத்தால் பெறும் பலன்கள் கோடி கோடியே.
ஏற்கனவே கூறியது போல் ஜாதகப் பொருத்தம் பார்க்காது திருமணங்கள் நிறைவேறி, தம்பதிகள் இடையே நல்ல சந்தானங்களைப் பெறும் சந்தர்ப்பம் ஜோதிட ரீதியாக இல்லாவிட்டாலும் கூட அதையும் மாற்றி அற்புத குழந்தை வரத்தைத் தரும் ஆன்மீக சக்தி சஷ்டி விரதத்திற்கு கண்டிப்பாக உண்டு.
அது எப்படி ? விதியை மீறி ஒரு காரியம் நிகழுமா என்று சந்தேகம் ஏற்படலாம். இங்கு எந்த விதியும் மாறவில்லை. விதியின் போக்கிலேயே சென்று விதியை முழுவதுமாக உணர்ந்தவர்களால் அதற்கான விரத முறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் ஓடும் பஸ்சில் இருந்து ஒருவர் தரையில் குதித்தால் அவர் கீழே விழுந்து காயம் அடைவார் என்பது விதி. ஆனால், இந்த விதியை அறிந்த பஸ் ஓட்டுனர் விரைந்து செல்லும் பஸ்சிலிருந்து லாவகமாக கீழே இறங்கி பஸ் வேகத்திலேயே சிறிது தூரம் ஓடி காயம் படாமல் தப்பித்துக் கொள்கிறார் அல்லவா ? இதுவே விதிப்படி விதியை வெல்வது.
இந்த அற்புதமே சஷ்டி விரத வழிபாட்டில் நிகழ்கிறது.
ஒருவர் பிறக்கும்போது கிரகங்கள் வானில் சஞ்சரிக்கும் நிலையை அவருடைய ஜனன கால கிரக சஞ்சார நிலை என்று வர்ணிக்கிறோம். இந்த கிரக நிலைகளை ஒருவருடைய ஜாதகக் கட்டம் என்று ஏற்றுக் கொள்கிறோம். அதன் பின்னர் கிரக சஞ்சாரங்களில் ஏற்படும் மாற்றங்களை கோசார பலன்கள் என்கிறோம். எனவே ஒருவருடைய வாழ்க்கைச் சம்வங்களைப் பற்றி முழுமையாக கணிக்க வேண்டுமானால் அவருடைய ஜனன காலத்தில் உள்ள கிரக நிலைகளையும் கோசார கிரக நிலைகளையும் அதாவது தற்போதைய கிரக நிலைகளையும் கணித்துப் பார்த்தால்தான் நடைமுறை சம்பவங்களின் முழுமையான பலன்களைத் தெரிந்து கொள்ள முடியும் அல்லவா ?
அதுபோல சஷ்டி விரதம் என்பது சூரிய சந்திர மூர்த்திகளின் கோசார ஜோதிட விதிகளின் அடிப்படையில் அமைந்த ஒரு அற்புத விரத முறையாகும். வளர்பிறை சஷ்டி திதி அன்று சூரியன் சஞ்சரிக்கும் ராசியிலிருந்து மூன்றாவது ராசியில் சந்திரன் சஞ்சரிப்பார். திதி என்பது சூரிய சந்திர மூர்த்திகளுக்கு இடையே உள்ள 12 டிகிரி கோண அளவாக அமைவதால் ஆறாவது திதியான சஷ்டி திதி வியாபிக்கும்போது இத்தகைய ராசி இடைவெளி கட்டாயமாக அமையும் அல்லவா ?
இப்போது கோசார ரீதியாக சந்திரன் சூரியனிடமிருந்து மூன்றாமிடத்திலும், சூரியன் சந்திரனிடமிந்து பதினோராம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இந்த உபசய ராசி கோசார கிரக சஞ்சார அமைப்பு தம்பதிகள் இடையே அற்புத அமுத சக்திகளை, சந்தான அமிர்த சக்திகளை உருவாக்கும். வராஹமிகிரரின் அஷ்டவர்க பாடங்களில் இதை பிந்து என்னும் வட்டங்களைக் கொண்டே குறிப்பார்கள். பிந்து என்பது விந்து என்னும் உயிர் சக்தியையும் குறிக்கும் சொல்லாகும்.
சித்தர்களின் இலக்கணப்படி சூரிய சக்தியை குறிப்பட்ட விதிகளின் மூலம் கணக்கிட்டால் அது குரு சக்தியைக் கொண்டிருக்கும் என்பதாகும். இக்காரணம் பற்றியே மிருகி முத்திரை என்ற சூரிய முத்திரை குரு வணக்க முத்திரையாக நமது அகத்திய பாரம்பரிய சித்தர் பெருமக்களால் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
எனவே சஷ்டி திதியில் உருவாகும் அற்புத உபசய ராசி கோசார விளைவால் குரு கோசார ரீதியாக எங்கிருந்தாலும் வலிமையான குரு சக்தி கிடைத்து விடுகிறது அல்லவா ? இதுவே சஷ்டி விரதத்தின் மகிமையாகும்.

ஸ்ரீபன்றி மலை சுவாமிகள் ஜீவாலயம்
நுங்கம்பாக்கம் சென்னை

அக்காலத்தில் சாந்தி முகூர்த்தம் என்ற தம்பதிகளின் தெய்வீக சங்கம யோகத்தை இரண்டாம் யாமத்தில்தான் நிகழ்த்துவார்கள். இதன் பின்னால் உள்ள தெய்வீக இரகசியங்கள் இப்போது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கி விடும்.
எனவே மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்ப்படும் எந்த சாதாரண காரியமாக இருந்தாலும், மகத்தான காரியமாக இருந்தாலும் நல்லோர்கள், பெரியோர்கள் சுட்டிக் காட்டிய முறையில் மேற்கொண்டால் அதனால் நமக்கு நற்பலன்களே கிட்டும் என்பது மல்லிகையின் மகத்துவம் நமக்குக் கூறும் பாடமாகும்.
இவ்வாறு தெய்வீக சக்திகள் கொண்ட மல்லிகை பூக்களை வளர்த்து, அற்புத நந்தவனங்களை அமைத்து தொண்டாற்றி வந்தவரே பிப்லாத மகரிஷியாவார். நாள்தோறும் ஸ்ரீநறுங்குழல் அம்பிகைக்கு மலர் கிரீடம், மாலைகள், கங்கணம், ஒட்டியாணம் போன்று மலர்களால் பலவித ஆபரணங்களையும் மலர்ப் பந்தல்களையும் அமைத்து வழிபட்டு வந்தார் பிப்லாத மகரிஷி.
இவ்வாறு தொடர்ந்த வழிபாட்டால் மகிழ்ந்த ஸ்ரீநறுங்குழல் நாயகி அன்னை பிப்லாத மகரிஷிக்கு அற்புத வரங்களை எல்லாம் அளித்து அவரைப் பெருமைப் படுத்தினாள்.
எனவே எவர் எங்கிருந்து பிப்லாத மகரிஷியை வேண்டி மலர் மாலைகளை குறிப்பாக மல்லிகை மாலைகளை இறை மூர்த்திகளுக்கு அளித்து பிப்லாத மகரிஷியை வேண்டி வந்தால் தாம்பத்ய வாழ்வில் பிறரிடம் வெளியிட முடியாத அனைத்து வேதனைகளுக்கும் அற்புத நிவாரணம் கிட்டும். திருவெறும்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநறுங்குழல் நாயகிக்கு மலர் வழிபாடுகளை நிகழ்த்தி வருதலால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்று அகத்திய கிரந்தங்கள் அம்பாளின் திருப்புகழுக்கு பெருமை சேர்க்கின்றன.
இதன் தொடர்பான ஒரு புராண வைபவத்தையும் காண்போம்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா இல்லையா என்ற விவாதத்தில் எம்பெருமான் முக்கண்ணனிடமே வாதத்தில் ஈடுபட்ட நக்கீரர் பற்றி நாம் அறிவோம்.
இறுதியில் நெற்றிக் கண் ஜோதியால் நக்கீரர் புடம் போட்ட தங்கமாக தூய்மைப்படுத்தப்பட்டாலும் அவருக்கு முக்கண் ஈசனின் தரிசனம் கிட்டவில்லை. இதற்காக எத்தனையோ யுகங்கள் தவம் இயற்றினாலும் அதனால் எந்தப் பலனும் கிட்டாமல் போகவே மனம் நொந்தவராய் அகத்திய முனியைச் சரணடைந்தார் நக்கீரப் பெம்மான்.
இறுதித் தீர்ப்பு என்பது எப்போதும் சித்தர்கள் கையில்தானே ?

மணிகர்ணிகாவில் மாதவர்
ஸ்ரீஅகத்தியர் வேதாரண்யம்

இது பற்றி சிவகுருமங்கள கந்தவர்வா இடியாப்ப சித்த ஈசன் நம் குரு மங்கள கந்தவர்வாவிடம் வர்ணிக்கும்போது, ”ஏண்டா, சாமி பொண்ணுங்களோட கூந்தல்ல வாசம் வருதுன்னு சொன்னாக்க அத அப்படியே இந்த நக்கீரன் ஒத்துக்க வேண்டியதுதானே. ஒனக்கு தெரியாதா, அவன் (சாமி) எத வேண்டுமானாலும் செய்து காட்டுவான்டா. பூனை ஒன்னுக்குப் போனா அதுல கூட மணத்தக் கூட்டுறவன் ஜகன்மாதா பார்வதி கூந்தல மணக்க வெக்க மாட்டானா. என்ன ?
இதெல்லாம் நல்லா கேட்டுக்க. எதிர்காலத்துல உங்கிட்ட சீடன்னு வர்ற எல்லாத்துக்கும் இத சொல்லு. அவுங்க மனசுல கடவுள் எதை வேண்டுமானாலும் சாதிப்பான் அப்படீங்கறத நீ அவுங்களுக்கு நல்லா புரிய வக்கனும். இதான் உன்னுடைய முதல் வேலை,” என்று உறுதியுடன் தெரிவித்திருந்தார்.

அகத்திய பெருமானும் பொறுமையுடன் நக்கீரரின் தவ முயற்சிகளையும் மன வேதனையையும் கேட்டு திருவெறும்பூரில் அம்பிகையின் வழிபாட்டில் உன்னதம் பெற்று விளங்கும் பிப்லாத மகரிஷியின் வழிகாட்டுதலைப் பெறும்படிக் கூறினார்.
அவ்வாறே நக்கீரரும் பிப்லாத மகரிஷியை தரிசித்து தன்னுடைய நிலையை விளக்கினார்.  பிப்லாத மகரிஷியும் மனமிறங்கி நக்கீரருக்கு ஸ்ரீநறுங்குழல் நாயகியை மல்லிகை மலர்களால் வழிபடும் முறையை விளக்கமாக எடுத்துரைத்தார்.
பிப்லாத மகரிஷி விவரித்த வண்ணமே நக்கீரரும் அற்புத நந்த வனங்களை ஏற்படுத்தி மல்லிகைப் பூந்தோட்டங்களை அமைத்து ஸ்ரீநறுங்குழல் நாயகியை வழிபட்டு இறைவன் இறைவியுடன் இணைந்த அற்புத தரிசனத்தைப் பெற்றார்.
அந்த இறை தரிசனமே நக்கீரப் பெருமானின் ஞானக் கண்களைத் திறந்தது. என்னதான் மனத் தூய்மை பெற்றாலும் ஒரு விஷயத்தை கண்ணெதிரே பார்த்தால்தானே மனம் அதை ஏற்றுக் கொள்கிறது. நக்கீரருக்கு சிவபெருமான் சூலத்தை கையில் ஏந்தி தரிசனம் அளித்தார். எம்பெருமானுடைய சூலத்திலிருந்து ஹம் என்ற பீஜாட்சர சக்திகள் பொலிந்து பராசக்தியின் நறுங்குழலில் நிரவி நறுமணமாய் உலகெங்கும் மணம் பரப்பும் அற்புதத்தைக் கண்டு வியந்தார் நக்கீரர்.
அந்த தரிசன வியப்பில் நக்கீரர் இயற்றிய பாடலே, “சூல பாணியை சுடர்தரு வடிவினை ...” என்ற திருமுறைப் பாடலாகும். சிவ சக்தி ஐக்ய துதியாக பஞ்சாட்சர ஹம் சக்திகள் சங்கமமாக திகழ்வதே இந்த தெய்வீகப் பாடலாகும்.
சூல பாணியை = ஐந்து எழுத்துக்கள் = பஞ்சாட்சரம் = சிவ சொரூபம்
சுடர்தரு = ஐந்து எழுத்துக்கள் = பஞ்சாட்சரம் = சக்தி சொரூபம்
வடி = ஹம் = சிவ சொரூபம்
வினை = ஹம் = சக்தி சொரூபம்
இவ்வாறு நக்கீரர் அருளிச் செய்த பதிகத்தை ஓதி மல்லிகை மலர் மாலைகளை இறை மூர்த்திகளுக்கு சார்த்தி வழிபட்டு வந்தால் இறைவன் மேல், குருவின் மேல் தோன்றும் அவநம்பிக்கை மறையும். கணவன், மனைவியரிடையே முளைக்கும் அவநம்பிக்கை மறைந்து குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
இவ்வாறு நந்தவனங்களை அமைத்து மல்லிகை மலர்த்தோட்டங்களை நக்கீரர் அமைத்த இடமே தற்போது திருவெறும்பூர் அருகில் உள்ள காட்டூர் என்னும் நகரப் பகுதியாகும்.  இறைவன் மேல் அவநம்பிக்கையைப் போக்கி இறைவியின் கூந்தலில் உள்ள நறுமணத்தைக் காட்டி, இறைவனையும் காட்டிய ஊர் என்று பொருள். குரு பக்தியை, கடவுள் நம்பிக்கையை காட்டும் ஊரே காட்டூர். அன்புடன் இயற்றும் மலர் வழிபாடு இறைவனைக் காட்டும் என்பதைக் காட்டும் ஊர் காட்டூர்.
நக்கீரரோடு நின்று விடுமா சித்தர்களின் இறைப் பணி. அது என்றும் தொடரும் இனிய பாரம்பரியம் அல்லவா ?
பிப்லாத மகரிஷியின் வழித்தோன்றலான ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் இந்த நறுங்குழல் நங்கை பூஜையை எப்படி நிறைவேற்றினார் என்பதைப் பார்ப்போம்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதை விட அரிது கலியுலகில் உத்தம குரு கிடைப்பது. அதை விட அரிது அவ்வாறு கிடைத்த குருவை குருவாய் மதித்துப் போற்றுவது. அதை விட அரிது அந்த சற்குருவின் நிழலடியின் கீழ் இருந்து பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்வது.
இவ்வாறு அரிதிலும் அரிய பாக்கியத்தைப் பெற்ற சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு அற்புதமான சித்தி வாய்க்கும். அதுவே பூசுர மாங்கல்ய சக்தி என்பது. இது மிக மிக அரிதான ஒருவகை சுமங்கலி சக்தி. பொதுவாக பூசுரம் என்றால் ”மிகச் சிறந்த, மிகவும் அரிதான” என்று பொருள்.

காயத்ரீ சக்கரம்

நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் லட்சக் கணக்கான அடியார்களுக்கு அன்னதானப் பிரசாதம் அளித்து வருகிறார்கள் அல்லவா? அவ்வாறு அன்னதான பிரசாதம் தயார் செய்தவுடன் அதை திருஅண்ணாமலையாருக்கும் ஆஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீரெங்கநாத மூர்த்திக்கும் நிவேதனம் செய்வது வழக்கம். அவ்வாறு நைவேத்ய வழிபாடு நிறைவேற்றும் முன் ஸ்ரீரெங்கநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி மணமுள்ள மலர் மாலைகளை சார்த்தி, குறிப்பாக நிறைய மல்லிகைச் சரங்களை சார்த்தி வழிபடுவார்கள்.
மாலையில் அந்த பெருமாள் பிரசாதமான மல்லிகை மலர்களை நமது ஆஸ்ரமத்தில் அன்னதான கைங்கர்யத்தில் பங்கு பெற்ற பெண் சுமங்கலி அடியார்களுக்கும் எஞ்சிய பிரசாத மலர்ச் சரங்களை கிரிவலம் வரும் அடியார்களுக்கும் பிரசாதமாக அளித்து விடுவார்கள்.

ஏற்கனவே மல்லிகை மலர்களின் தியாக இயல்புகளைப் பற்றி விவரித்துள்ளதால் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் இந்த திருப்பணியின் பின்னால் உள்ள அற்புத தெய்வீக இரகசியங்களை நீங்கள் ஓரளவு உணர்ந்து கொண்டிருக்கலாம்.

இருந்தாலும் மனிதர்களால் கிரகிக்க முடியாத சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் சில சித்த பொக்கிஷங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
பௌர்ணமி அன்று சந்திரன் பதினாறு கலைகளுடன் பூரணமாய்ப் பொலிவதால் திருஅண்ணாமலை மலையிலிருந்து, இறைவனின் இறைத் திருமேனியிலிருந்து பொங்கிப் பொலியும் அமிர்த சக்திகள் கிரிவலப் பாதை எங்கும் நிரவி இருக்கும். கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஆஸ்ரம புத்தக நிலையத்தில் பெருமாள் பிரசாதமான மல்லிகை மலர்களை தலையில் சூடிய சுமங்கலிப் பெண் அடியார்கள் வந்து அமர்ந்து இறை பிரசுரங்களை கிரிவலம் வரும் அடியார்களுக்கு விநியோகிக்கும் தெய்வப் பணியில் ஈடுபடுவார்கள்.
அது மாலை முதல் யாமமாக அமைவதால் மல்லிகை மலர்கள் தங்கள் பூரண சக்திகளுடன் திகழும். அத்துடன் பௌர்ணமி நிலவின் அமிர்த சக்திகள், உண்ணாமுலை அண்ணாமலையாரின் தெய்வீக ஆசீர்வாத சக்திகள் இவை எந்த அளவிற்கு பரிணமிக்கும் என்பது வார்த்தைகளைக் கடந்த தெய்வீகம். இவ்வாறு மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கிரிவலப் பாதையில் மல்லிகை மலர்களால் ஈர்க்கப்பட்ட மங்கள மாங்கல்ய சக்திகள் அனைத்தும் இரண்டாம் யாமமான இரவு ஒன்பது மணி முதல் 12 மணி இடைவெளியில் ஆஸ்ரம விதானத்தில் மேற்கூரையில் நிர்மாணிகக்ப்பட்டுள்ள ஓங்கார த்ரயம்பக சக்கரத்தால் மேலும் புனிதப்படுத்தப்பட்டு கிரிவலம் வரும் இறையடியார்களுக்கு திரு உண்ணாமுலை சமேத திரு அண்ணாமலையார் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. மேலும் இந்த மங்கள மாங்கல்ய சக்திகள் ஆஸ்ரமத்தின் எதிரில் அமைந்துள்ள சிவ சக்தி ஐக்ய தரிசனத்தால் இன்னும் பல கோடி மடங்கு சக்தியுடன் பொங்கிப் பொலியும்.
அதோடு மட்டுமல்லாமல் நள்ளிரவில் பௌர்ணமி நிலவின் அமிர்த நிலைகள் உச்சகட்டத்தை அடையும் என்பதும் நீங்கள் அறிந்ததே. அடுத்த யாமமான நள்ளிரவு முதல் மூன்று மணி வரையிலான நேரத்தில் பிரசாத மல்லிகை மலர்கள் யோகத்தில் நிலைத்து விடும். ஆனால், இந்த யோகத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் லட்சக் கணக்கான கோடிக் கணக்கான தேவர்கள், தெய்வங்கள், ரிஷிகள், யோகிகளின் தியான யோக நிலைகளும் கூடுவதால் அந்த மல்லிகை மலர்களின் தியான நிலையை எந்த மனித மனத்தினாலும் கற்பனை செய்ய முடியாது.
விடியற்காலை நான்காவது யாம நேரத்தில் ஆஸ்ரம பெண் அடியார்கள் ஓய்வுக்குச் சென்று விடுவார்கள். மறுநாள் அவர்கள் தலையில் உள்ள பிரசாத பூக்கள் திருஅண்ணாமலை புனிதப் பூமியில் சேர்ந்து மறைந்து விடும். நாம் ஏற்கனவே கூறியது போல் பொதுவாக திருஅண்ணாமலையில்தான் எந்த ஜீவனும் தன்னுடைய முக்திக்கு முந்தைய கடைசிப் பிறவியைப் பெறும் என்ற நியதிக்கு ஏற்பவும், மல்லிகைப் பூக்களுக்கே உண்டான இயற்கையான தெய்வீக வரத்தினாலும் அவை அனைத்தும் முக்தி நிலையை அடைந்த நிர்மால்ய பூ தேவதைகளாய் திருஅண்ணாமலை புனிதப் பூமியை அலங்கரித்த நிலையில் இருப்பர்.
இப்போது ஓர் அற்புதம் நிகழும். அது என்ன ?
திதி, யோகம், நாள் என்ற பஞ்சாங்கங்களின் ஐந்து அங்கங்களில் கரணம் என்று ஒன்று உண்டு. திதியில் பாதி கரணம் ஆகும். இவற்றில் பவம், பாலவம் முதலான ஏழு கரணங்கள் சுப கரணங்களாகும். சகுனி, சதுஷ்பாதம் முதலான நான்கு ஸ்திர  கரணங்கள் அசுப கரணங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் நிர்ணியிக்கப்பட்டு உள்ளன.
காரிய சித்தியைத் தர வல்லதே கரணங்களாகும். எனவே நாம் செய்யும் ஒரு காரியத்தில் எந்த அளவிற்கு செல்வம் கிட்டும் என்பதை திதியைக் கொண்டும், ஒரு வழிபாட்டில் கிட்டும் ஆரோக்கிய நிலையை யோகத்தைக் கொண்டும் நிர்ணயித்தால்தான் அது சரியான பலனைக் கொடுக்கும்.
சுப கரணமான பவ கரணத்தில் தோன்றியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார். பவ கரணம் சிவ வழிபாட்டிற்கும், தெய்வ வழிபாட்டிற்கும் உகந்ததாகும்.
எனவே மேற்கூறிய முறையில் திருஅண்ணாமலை புனிதப் பூமியில் யோகம் கொண்டிருக்கும் மல்லிகைப் பூக்களை பிப்லாத மகரிஷியின் உத்தம வழித் தோன்றல்களாகிய சீடர்கள் வளர் பிறையில் பிரதமை திதி அன்று வரும் பவ கரண நேரத்தில் தங்கள் இரு கைகளாலும் ஏந்தி எடுத்துச் சென்று திருஅண்ணாமலை கிரிவலம் பாதையில் பதித்து சிவ லிங்க மூர்த்தங்களாக பிரதிஷ்டை செய்து விடுவார்கள். புனிதமான இந்த பிரசாத மல்லிகை மலர்களை நிர்மால்ய பூசுர லிங்கங்கள் என்று சித்தர்கள் பரிபாஷையில் அழைக்கின்றார்கள்.
சுயம்பு லிங்க மூர்த்திகளுக்கு இணையான ஆத்ம லிங்க மூர்த்திகளின் பலன்களைக் கொடுக்கக் கூடியது என்றால் இந்த அபூர்வ மங்கள மாங்கல்ய சக்தி லிங்கங்களின் மகிமையை எப்படி வார்த்தைகளில் வடிக்க இயலும்.

இவ்வாறு ஸ்ரீவெங்கடராம சுவாமிகளால் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் நிர்மாணிக்கப்பட்ட சுயம்பு நிர்மால்ய லிங்கங்கள் எத்தனை லட்சம், கோடி என்பதை நீங்கள் கணக்குப்போட்டு மகிழ்ச்சி கடலில் மூழ்கித் திளையுங்களேன்.

பவ கரண பவ வழிபாடு

காரியத் தடங்கல்களைப் போக்கி அற்புத காரிய சித்திகளை அருள வல்லதே சுக்ல பட்ச பவ கரண வழிபாடாகும். பவ கரண வழிபாடு பற்றி சித்தர்கள் அளிக்கும் விளக்கங்களை இங்கு அளிக்கிறோம்.
அமாவாசைக்கு அடுத்த திதியை சுக்ல பட்ச பிரதமை திதி என்று அழைக்கிறோம். திதியில் பாதி கரணம் என்பதால் பிரதமை திதியின் முதல் பாதியில் ஸ்திர கரணமும் பிற்பாதியில் பவ கரணமும் அமைகிறது. அதனால் பிரதமை திதியின் முன் பாதி அசுபமாகவும் பின்பாதி சுபமானதாகவும் ஜோதிட சாஸ்திரத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் முதல் பாதியை ஏற்றுக் கொண்ட தமிழக மக்கள் சுக்ல பட்ச பிரதமை திதியை நற்காரியங்களுக்கு ஒத்து வராததாகவும் இரண்டாம் பகுதியை ஏற்றுக் கொண்ட ஆந்திர மாநில மக்கள் நற்காரியங்களுக்கு ஏற்ற நன்னாளாக பிரதமை திதியை கடை பிடித்து வருகிறார்கள்.
எனவே உத்தம தெய்வம்  தோன்றிய நன்னாளாக சுக்ல பட்ச பிரதமை திதியை பவ கரண வழிபாடாக அனுசரித்து வழிபட்டு வருவதால் அற்புதமான நோய் நிவாரண சக்திகளையும், ஐஸ்வர்ய கடாட்ச சக்திகளையும் பெற்று எளிதில் இறையருளுக்கும் அரிதிலும் அரிதான குரு அருளுக்கும் பாத்திரமாகலாம்.
மேலும் பவ கரண நேரமானது பசு, எருது போன்ற வழிபாடுகளுக்கும், பசு மடங்களைப் பராமரிப்பதற்கும் உகந்ததாகும். தம்பதிகளுக்கிடையே நிலவும் எத்தகைய மன வேறுபாடுகளையும் களைந்து, மனக் கொந்தளிப்புகளை அடக்கி அமைதியை ஏற்படுத்துவதே பவ கரண வழிபாடாகும். விவாரகத்து நிலையிலுள்ள குடும்ப பிரச்னைகளும் தீர்வு பெறும்.

அபூர்வமாக ஐந்து சீடர்களுடன்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி மலைக்கோட்டை

சுக்ல பட்ச பிரதமை திதி நாளில் நிறைவேற்றுவதே பவ கரண வழிபாடாகும். இவ்வழிபாட்டின்போது பெண்கள் தலைக்கு குளித்திருத்தல் அவசியம். தலை முடியை வாராமல் தொங்க விடுவதைத் தவிர்க்கவும். கட்டாயம் சடை பின்னியோ கொண்டை போட்டோ முடியை வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
முப்பது முழத்திற்குக் குறையாமல் மல்லிகைப் பூக்களை பூச்சரமாக வைத்துக் கொண்டு ஏதாவது திருக்கோயில் சன்னதிகளில் வழிபாட்டைத் தொடரவும். மல்லிகைப் பூ கிடைக்காவிட்டால் சம்பங்கி பூவையோ அதுவும் கிடைக்காத சமயத்தில் தாமரைப் பூக்களையோ வழிபாட்டிற்காக வைத்துக் கொள்ளவும். இவற்றுடன் பூவன் வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, குண்டு மஞ்சள் போன்ற மங்களைப் பொருட்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து அதைச் சுற்றி அமர்ந்து கொண்டு தங்களுக்குத் தெரிந்த தேவாரத் திருப்பாடல்களையோ, அங்காள பரமேஸ்வரி அந்தாதி, அபிராமி அந்தாதி போன்ற பாடல்களை ஓதி இறை மூர்த்திகளை வழிபடவும்
வழிபாடு நிறைவடைந்த பின்  மூன்று வெற்றிலை, இரண்டு கொட்டைப் பாக்கு, சிறிது சுண்ணாம்பு, இரண்டு மஞ்சள், இரண்டு வாழைப்பழம் இவற்றுடன் சிறிதளவு பூவை வைத்து திருக்கோயிலுக்கு வரும் அடியார்களுக்கு பிரசாதமாக அளித்து விடவும். ஆண், பெண், சிறுவர்கள் என அனைவருக்கும் இறை பிரசாதத்தை அளிக்கலாம். பூக்களை மூன்று பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை வழிபாட்டில் பங்கு பெறும் பெண்களும், இரண்டு பங்கை மங்கள பிரசாதமாக அளிப்பதற்கும்  பயன்படுத்திக் கொள்தல் நலம்.
அவரவர் விருப்பம், வசதியைப் பொறுத்து வளையல், மெட்டி, ரவிக்கை, புடவை, ரிப்பன், கண் மை, சாந்து, கண்ணாடி போன்ற மங்களப் பொருட்களையும் தானமாக அளிக்கலாம்.
திண்டு தோசை எனப்படும் கெட்டியாக வார்க்கப்பட்ட தோசையில் பெரிய வெங்காயம் சேர்த்த காரச் சட்னியை வைத்து தானம் அளித்தல் சிறப்பு. பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு மசால் சேர்த்து மசால் தோசையாகவோ, நெய் ரோஸ்ட் என்ற வகையிலோ தானம் அளித்தலும் சிறப்பாகும்.
வெண்ணிற தோசையின் மேல் வைக்கப்பட்ட காரச் சட்னி பெருமாளுடன் சேர்ந்த லட்சுமி தேவியின் அனுகிரகத்தைத் தரும். வெங்காயம் என்பது நிலத்தடி தாமரை என்று சித்தர்களால் போற்றப்படுகின்றது. மேலும் வெங்காயத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் சக்கரம்போல் இருப்பதால் இது பெருமாளின் சக்ராயுத சக்திகளைக் கொண்டிருக்கும். இது பல இடர்களைக் களைந்து காரிய சித்தியை நல்கும்.
பொதுவாக ஒரு மாதத்தில் வரும் எட்டு பவ கரணங்களிலும் மேற்கூறிய வழிபாடுகளை நிகழ்த்தி வருதல் மிகவும் சிறப்புடையதாகும். இயலாதோர் சுக்ல பட்ச பிரதமை திதியன்று அமையும் பவ கரண வழிபாட்டையாவது அவசியம் நிகழ்த்தி வருதலால் அற்புதமான காப்புச் சக்திகளைப் பெறலாம்.

திருஅண்ணாமலையில் இயற்றப்படும் வழிபாடுகளுக்கு ஆயிரம் மடங்கு பலன்கள் உண்டல்லவா ? எனவே திருஅண்ணாமலையில் பவ கரண வழிபாட்டை மேற்கொள்ள விரும்பினால் அவர்களுக்கும் சித்தர்களின் வழிகாட்டுதல் நிச்சயம் உண்டு.
திருஅண்ணாமலையில் பவ கரண நேரம் முழுவதுமே கிரிவலத்தில் கழிப்பது என்பது மிகவும் சுலபமாக அனைவராலும் நிறைவேற்றக் கூடிய ஒரு எளிய பூஜையாகும். ஆனால், இதன் பலாபலன்களோ அற்புதம்.
மணமான பெண்களும் திருமணமாகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டால் அற்புத பலன்களைப் பெறலாம். திருமணமான பெண்கள் இயன்றவரை தங்கள் கணவன்மார்களுடன் சேர்ந்து கிரிவலம் வருதலே சிறப்பாகும். அதுவே உத்தமமான வழிபாடாகும். கணவனுக்கு நீண்ட ஆயுளை அளித்து, குடும்ப ஒற்றுமையைப் பேணுவது பவ கரண வழிபாடு.
இவ்வழிபாட்டில் கடையில் வாங்கிய மல்லிகைப் பூச்சரங்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. தங்கள் கையால் வாழை நார் கொண்டு தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரங்களே காரிய சித்திக்கு உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேறு எவராலோ தொடுக்கப்பட்ட மலர்ச் சரங்களை நீங்கள் சூடி கிரிவலம் மேற்கொண்டால் ஒரு வேளை அவர்கள் தகாத, தவறான எண்ணங்கள் கொண்டிருந்தால் அவர்களுடைய தவறான காரியங்களுக்கு நீங்கள் துணை போனது போல் ஆகும்.
நாம்தான் அந்த மல்லிகைப் பூவிற்கு உண்டான பணத்தைக் கொடுத்து விட்டோமே என்று நினைத்தாலும் கரண வழிபாடு காரிய சித்தி வழிபாடாக அமைவதால் இதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்பது முக்கியம்.
பன்னிரெண்டு முழத்திற்குக் குறையாமல் மல்லிகைப் பூக்களைத் தொடுத்து அதில் 11 முழப் பூக்களை இறை அடியார்களுக்கும் இறைவனுக்கும் கோயிலில் அளித்து விட்டு அதிகபட்சமாக ஒரு முழப் பூவை மட்டும் சுமங்கலிப் பெண்கள் தங்கள் கூந்தலில் பந்தாக வைத்து சூடிக் கொள்ள வேண்டும். பூக்கள் சரங்களாய் ஆடக் கூடாது என்பது முக்கியம்.
இவ்வாறு சூடிய மல்லிகைப் பூக்களுடன் திருஅண்ணாமலையை பவ கரணம் நேரம் முழுவதும் கிரிவலம் வந்து கிரிவலம் நிறைவேறியவுடன் திருஅண்ணாமலையாருக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த மல்லிகைப் பூக்களை ஒரு பருத்தித் துணியில் வைத்து ஓடும் ஆற்று நீரிலோ கடலிலோ சேர்த்து விடுதலால் பவ கரண வழிபாடு பூரணத்துவம் பெறுகின்றது.
அவ்வாறு ஒரு பட்சமான பதினைந்து தினத்திற்குள் இந்த பூக்களை கடலிலோ ஆறுகளிலோ சேர்க்க முடியாவிட்டால் தங்கள் வீட்டிலோ ஆறு கடல் ஓரங்களிலோ சிறிது பள்ளம் தோண்டி இந்த மலர்களைப் பிறர் பாதம் படாதபடி மண்ணில் புதைத்து விடுதல் நலம்.
மேற்கூறிய பவ கரண வழிபாட்டால் வாஸ்து தோஷங்கள் அகலும். நிலத்தடி நீர் தூய்மை பெறும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளும், மாதவிடாய்த் துன்பங்களும் அகலும். கணவன் மனைவியரிடையே பரஸ்பர அன்பு ஓங்கும்.
வறுமை, அழகின்மை, உடல் நோய்கள் போன்ற காரணங்களால் திருமணத் தடங்கல்களால் வருந்தும் கன்னிப் பெண்களுக்கு நல்ல முறையில் திருமணம் நிகழ மேற்கூறிய வழிபாடுகள் உதவும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பவ கரண நேரமான சுமார் 12 மணி நேரம் முழுவதும் திருஅண்ணாமலை கிரிவலம் வருவதிலேயே கழிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், நடுவில் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வதும், உணவு, பழங்கள், நீர் அருந்துவதும் ஏற்புடையதே.
கிரிவல நிறைவில் இயன்ற தான தர்மங்களை நிறைவேற்றுதல் மங்கள சக்திகளை அற்புதமான முறையில் வர்ஷிக்கும்.

ஜமதக்னி சுக்ர சக்திகள்

ஆரோக்கியமான சந்தான பாக்கியத்திற்கு வலிமையான சூரிய சந்திர சக்திகளோடு சுக்ர சக்திகளும் மிகவும் இன்றியமையாததே. சூரியனை ஆத்மா என்றும், சந்திரனை மனது என்றும் சுக்கிரனை சுக்கிலம் என்றும் அதாவது ஜீவனை உருவாக்கும் உயிர் தத்துவமாகவும் கொள்வர்.
சூரிய பகவான் ஒரு சக்கரம் உடைய ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பூலோக மண்டலத்தை தினமும் பவனி வருகிறார் என்று சொல்கிறோம். இதன் பின்னால் உள்ள ஆன்மீக விளக்கங்கள் கோடி கோடி.
உதாரணமாக, சூரிய சக்கரத்தின் ஆரங்கள் 12. இதையே பன்னிரெண்டு வகையான சூரிய சக்திகள் என்றும் சொல்வதுண்டு.

ஜமதக்னி சிவ சுக்ர தரிசனம்

ஓம் மித்ராய நமஹ
ஓம் ரவியே நமஹ
ஓம் சூர்யாய நமஹ
ஓம் பாணவே நமஹ
ஓம் ககாய நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ
ஓம் மரீசயே நமஹ
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் சவித்ரே நமஹ
ஓம் அர்க்காய நமஹ
ஓம் பாஸ்கராய நமஹ
என்று தினமும் சூரிய உதயத்திற்கு முன்னால் 12 முறை ஓதி அந்த சூரிய சக்திகளை வணங்குவதால் கண் நோய்கள் விலகும். ஆயுள் வளரும்.
அதே போல சுக்ர சக்திகளிலும் பலவிதமான சுக்ர சக்திகள் உண்டு. இவை ஜமதக்னி சுக்ர சக்திகள் என்று அழைக்கப்படுகின்றன.  ஜமதக்னி சிவ சக்தி, ஜமதக்னி குக சக்தி, ஜமதக்னி ஸ்ரீ சக்தி என்பவையே அந்த சுக்ர சக்திகளாகும்.
இதை எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் சூரியனைப் பார்க்கும்போது அதில் காணும் பிரகாசத்தை ஜமதக்னி சிவ சுக்ர சக்தியுடன் ஒப்பிடலாம். சூரியன் நமது உடல் மேல் படும்போது நாம் உணரும் உஷ்ண சக்தியை சுக்கிரனில் உள்ள ஜமதக்னி குக சக்தியாகும்.
சூரியன் பார்ப்பதற்கு உஷ்ணத்தை வெளியிடுவது போல் தோன்றினாலும் சூரிய கோளமானது மிகவும் குளிர்ச்சி உடையது என்பதே சித்தர்கள் சுட்டிக் காட்டும் ஆன்மீக விந்தையாகும்.
சாதாரண மனிதர்கள் கூட சித்தர்கள் அருளிய சூரிய நமஸ்கார முறையை மேற்கண்ட 12 சூரிய மந்திரங்கள் ஓதி நிறைவேற்றினால் சூரிய மண்டலம் எந்த அளவு குளிர்ச்சி உடையது என்பதை நம் உடலில் ஏற்படும் குளிர்ச்சி தன்மையை வைத்து நாமே சந்தேகமற புரிந்து கொள்ளலாம்.
அது போல சுக்ர பகவானின் குளிர்ச்சி தன்மையை உணர்த்துவதே ஜமதக்னி ஸ்ரீ சக்திகள்.
இந்த சுக்ர சக்திகளை எவ்வாறு பெறுவது ? தேவ உலகங்களிலிருந்து சுக்ர சக்திகள் நிறைந்த தேங்காயை தென்னை மரங்கள் மூலமாக பூமிக்கு கொண்டு வந்து அற்புத சேவை ஆற்றிய பரசுநாமர் மூலம் நாம் எளிதாக இந்த சுக்ர சக்திகளைப் பெற்று விடலாம்.
எத்தனையோ யுகங்கள் தவமியற்றி சுக்ர சக்திகளின் தெய்வீக தன்மையை பூரணமாக உணர்ந்து விலங்குகள், மக்கள் என பாரபட்சமில்லாமல் அனைவரின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்து வரும் அவதார மூர்த்தியே பரசுராமர் ஆவார்.
ராம அவதாரத்திற்கு முன்னரே பல யுகங்கள் தவமியற்றி ராமரிடம் தன்னுடைய தனுசுவை நாணேற்றச் செய்து அதனால் தான் தோல்வி அடைந்ததாக ஒரு விஷ்ணு லீலையைப் புரிந்து அதன் மூலம் சுக்ர சக்திகளை ராம பிரானுக்கு வர்ஷித்த பரசு ராம சுக்ர லீலையும் நீங்கள் அறிந்ததே.
பரசுராமரே இந்த ஜமதக்னி சுக்ர வழிபாட்டு முறையையும் மக்கள் ஆரோக்கியமான சந்தானங்களையும், குடும்ப ஒற்றுமையுடன் வாழ்ந்து லட்சுமி கடாட்ச சக்திகளைப் பெறவும் அளித்துள்ளார்.

ஜமதக்னி சுக்ர குக தரிசனம்

மாலையில் ஆறு மணி அளவில் தினமுமே சுப ஹோரை நேரம் அமைவதாக ஏற்கனவே விவரித்துள்ளோம் அல்லவா ? இந்த சுப ஹோரை நேரத்தில் மேற்கு திசையில் தொடுவானத்திற்கு சற்று மேல் தரிசனம் அளிப்பவரே சுக்ர பகவான் ஆவார்.
தினமும் சுக்ர மூர்த்தியை தரிசனம் பெறுவதால் எளிய முறையில் சுக்ர சக்திகளை நேரிடையாகவே பெற்று விடலாம். சுக்கிர  கிரகமானது தென்னை மரங்கள், தலவிருட்சங்கள், கோயில் கோபுரங்கள், கங்கை காவிரி போன்ற தீர்த்தங்கள் இவற்றின் மேல் பிரகாசிக்கும்போது அது ஜமதக்னி சிவ சக்திகளை வர்ஷிக்கும்.
சுக்கிர கிரகம் முருகப் பெருமானின் கோபுரங்கள், பழநி போன்ற மலைத் தலங்கள், திருஅண்ணாமலை போன்ற அக்னி தலங்களில் பிரகாசிக்கும்போது அது ஜமகதக்னி குக சுக்ர சக்திகளை அனுகிரகமாகப் பொலியும்.
பர்வதமலை, வில்வ மரம், காயத்ரீ போன்ற நதிகளின் மேல் பிரகாசிக்கும்போது அது ஜமதக்னி ஸ்ரீ சக்தியைப் பொலியும். இங்கு அளிக்கப்பட்டுள்ள படங்களை சற்றே ஊன்றி கவனித்தால் இந்த உண்மை புரியும்.
ஜமதக்னி ஸ்ரீ சக்தி என்பது சூரிய மண்டலத்தில் உள்ள குளிர்ச்சியை பிரதிபலிக்கும் அல்லவா ? தலவிருட்சமாக உள்ள வில்வ மரத்தின் அடியில் ஏற்றிய ஒரு அகல் தீபத்தின் படத்தை இங்கு அளித்துள்ளோம். அதில் வானநீல நிறத்தில் பொலியும் சுக்ர சக்தியை சாதாரண மனித கண்ணால் தரிசனம் செய்து ஆனந்தம் பெறலாம்.
இவ்வாறு எம்முறையில் சுக்ர தரிசனத்தைப் பெற்றாலும் தரிசனத்திற்குப் பின் தேங்காய் சாதம் குறைந்தது ஆறு பேருக்காவது தானம் அளித்தல் சிறப்பாகும். வெள்ளிக் கிழமைகள், சஷ்டி திதிகள், நவராத்திரி தினங்களில் இயற்றப்படும் இத்தகைய வழிபாடுகளுக்கு கிட்டும் பலன்களோ அற்புதம்.

காயத்ரீ ஜப தியானம்

பொதுவாக இரண்டு மூன்றாண்டுகள் தொடர்ந்து ஹம் ஸ்வர யோகத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்த நிலையான காயத்ரீ ஜப தியானத்தில் எளிதில் சிரம்மின்றி ஈடுபடுவதால் அற்புதமான பலன்களைப் பெறலாம். ஆனால், மற்றவர்களும் இந்த காயத்ரீ தியானத்தில் ஈடுபட முயற்சிப்பதில் தவறு கிடையாது.
ஓம் பூர் புவ சுவஹ தத்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத் என்ற காயத்ரீ மந்திரத்தை
ஓம்
பூர் புவ சுவஹ
தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
என்று ஐந்து பகுதிகளாக பிரித்து ஓதி ஜபிப்பதே தொன்று தொட்டு வரும் ஜப முறையாகும். ஆனால், இம்முறையில் எத்தனையோ ஆயிரக் கணக்கான பிரயோக முறைகளும் சம்பிரதாயங்களும் புரச்சரண முறைகளும் உண்டு என்பதும் உண்மையே.
மேற்கண்ட மந்திரத் தொகுதிகளை பிரணவம், மண்டலம், இலக்கணம், ஆத்மா, ஐக்யம் என்று சித்தர்கள் சுட்டிக் காட்டும் ஐந்து பகுதிகளாகவும் அழைக்கலாம்.
முதலில் ஓம் என்று பிரணவத்தை ஓதும்போது அந்த ரீங்கார சப்தத்தை ஆலய மணியில் எழும் ஒலியாக நினைத்து அது மெல்ல மெல்ல எங்கோ கரைந்து செல்வதாக மனதில் தியானிக்க வேண்டும். இந்த பிரணவ தியானத்திற்கு ஏதுவாக இங்கு அளிக்கப்பட்டுள்ள சிதம்பர நடராஜ தலத்தில் அமைந்துள்ள நிருத்த கண்டா ஆலய மணி ஓசையில்

மனதைக் குவித்து நிறைவேற்றுவதால் அற்புத பலன்களைப் பெறலாம்.
இரண்டாவதான பூர் புவ சுவஹ என்ற மண்டலப் பகுதியை ஓதும்போது மண் நிறம் அல்லது சிவப்பு, செம்மண் நிறத்தையும், மஞ்சள் நிறத்தையும், பச்சை நிறத்தையும் மனதில் தியானிக்க வேண்டும். அல்லது இந்த நிறங்களைக் கொண்ட ஒரு பெரிய பந்தையும் மனதில் எண்ணிப் பார்க்கலாம். அல்லது நமது ஆஸ்ரம வாசலில் வரையப்பட்டுள்ள டைமண்ட் வடிவ மூவண்ண காயத்ரீ சக்கரத்தை மனதில் கொண்டு வந்தும் தியானிக்கலாம்.
பூர் புவ சுவஹ என்பது பூ மண்டலம், புவர் மண்டலம், சுவர் மண்டலம் அல்லது லோகங்களைக் குறிக்கும். இந்த மண்டலங்கள், லோகங்கள் எல்லாம் உண்மையில் உண்டா. நிச்சயம் உண்டு. இவைகளைக் காண முடியுமா ? கட்டாயமாக இந்தப் பிறவியிலேயே பார்க்க முடியும். நம்பிக்கையுடன் சற்றே முயன்றால் போதும்.
சிவன் கோயில்களில் 63 நாயன்மார்களின் முன்னால் வரிசையாக தீபம் ஏற்றி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். தத் சவிதுர் வரேண்யம் என்ற இலக்கணப் பகுதியை ஓதும்போது நெஞ்சை அள்ளும் அந்த ஆனந்த தீபக் காட்சியை கண் முன்னே கொண்டு அதில் மூழ்குங்கள்.
பர்கோ தேவஸ்ய தீமஹி என்று ஓதும்போது ஒரு இறைச் சன்னதியிலேயே அல்லது வீட்டிலோ பிரகாசிக்கின்ற ஒரு அகல் விளக்கில் ஏற்றப்பட்டுள்ள்ள ஒரு தீபத்தை நினைத்து தியானத்தை மேற்கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் மனக் கண்ணில் அகல் விளக்கும் தீபம் மட்டுமே காட்சி அளிக்க வேண்டும்.
அடுத்து தியோ யோந ப்ரசோதயாத் என்று ஓதும்போது இருள் நிறைந்த அறையில் பிரகாசிக்கும் ஒரு ஜோதியை மட்டுமே நீங்கள் நினைவு கூற வேண்டும். ஜோதி ஜோதி ஜோதி. அங்கு விளக்கோ திரியோ கூட கிடையாது.
இது ஒரு சுற்று காயத்ரீ ஜப தியானமாகும். சாதாரணமாக முறையாக காயத்ரீ மந்திரத்தை வாய் விட்டு ஜபித்தால் சுமார் 30 செகண்ட்டுகள் நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் மேற்கூறிய முறையில் காயத்ரீ ஜபம் செய்யும்போது அதற்காக ஒரு நிமிடமோ இரண்டு நிமிடங்களோ கூட ஆகலாம். அதனால் தவறு கிடையாது.

                 தத் சவிதுர் வரேண்யம்

   

               பர்கோ தேவஸ்ய தீமஹி

   

               தியோ யோந ப்ரசோதயாத்

இப்போது மேற்கூறிய ஐந்து காயத்ரீ பதங்களை மீண்டும் மீண்டும் சொல்லிப் பாருங்கள். அதாவது, பிரணவம், மண்டலம், இலக்கணம், ஆத்மா, ஐக்யம் என்று மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லிப் பார்த்தால் நீங்களாகவே சட்டென ஒரு நிரந்தர உண்மையை உணர்வீர்கள்.
பிரணவம் என்னும் ஓங்காரத்திலிருந்து தோன்றிய உயிர் தூல சூட்சும காரண சரீரங்களில் உறைந்து இறைவனை அடையும் ஏதாவது ஒரு பக்தி முறையை பயின்று தான் ஒளி வடிவில் உள்ள இறை தத்துவம் என்பதை உணர்ந்து அந்த பிரம்மாண்ட ஜோதி வடிவான இறைவனுடன் கலப்பதே மனிதனின் நோக்கமும், மனிதப் பிறவியின் பயனும். அதை நிறைவேற்றுவதே இந்த காயத்ரீ ஜப தியானத்தின் பலன் என்பதே  நீங்கள் நீங்களாகவே பெற்றுத் தெளியும் தெய்வீக உண்மையாகும்.
நமது தென்னிந்திய புனிதப் பூமியில் தோன்றிய நாயன்மாரகள் அனைவரும் ஏதாவது ஒரு பக்தி மார்கத்தை மேற்கொண்டு இறைவனை அடையும் முறையை தங்கள் வாழ்க்கைத் தத்துவமாக வாழ்ந்து காட்டிச் சென்றவர்களே.
திருநீலகண்டர்  இறைவன் இந்த உலக மக்களைக் காப்பாற்ற விடம் உண்ட தியாகத்தை நினைத்து மெய்சிலிர்த்து திருநீலகண்டம் திருநீலகண்டம் என்று தியானித்தே முக்தி அடைந்தார்.
இயற்பகை நாயனார் உயிருக்குயிராக மதித்த தன்னில் பாதியான தன் மனைவியை ஒரு இறையடியாரின் போகத்திற்கு அளித்து சிவனருள் பெற்றார்.
இதுவே பெரியோர்கள் சுட்டிக் காட்டிய பக்தி இலக்கணமாகும்.
இவ்வாறு மேற்கூறிய முறையில் ஒரு முறை கூறும் காயத்ரீ மந்திரத்தின் பலன் அவரவர் ஈடுபாடு நம்பிக்கையைப் பொறுத்து சர்வ சாதாரணமாக ஆயிரம், லட்சம் மடங்கு மந்திரங்கள் ஓதிய பலனைப் பெறலாம்.
இதுவே நம் சற்குரு வெங்கடராம சுவாமிகள் அருளிய சக்தி வாய்ந்த காயத்ரீ ஜப தியான முறையாகும்.
1990 ஆண்டு கொண்டாடப்பட்ட கார்த்திதை தீப உற்சவத்தின்போது லட்சக் கணக்கான இறை அடியார்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. வாடகைக்கு எடுத்த ஒரு சத்திரத்தில் தீவிர துரித கதியில் இயங்கிய அன்னதான சமையல் காரியங்களுக்கு இடையேதான் மேற்கண்ட சித்த தியான முறையை ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் திருவாய் மலர்ந்து அருளினார்கள்.
இந்த தேவ, வேத, சித்த பொக்கிஷத்தைக் கேட்கும் சீரிய இறைப் பேற்றை பெற்ற அடியார்களோ ஐந்து பேர்தான். அப்படியானால் இந்த காயத்ரீ மந்திர ஜப தியானத்தை உபதேசித்தது சற்குரு வெங்கடராமனா இல்லை மௌனகுரு தட்சிணா மூர்த்தியா ?

மறையுடையாய்
தோடுடைய செவியன்
பித்தா பிறைசூடி
மந்திரமாவது நீறு
துஞ்சலும் துஞ்சல்
காதலாகிக் கசிந்து
சொற்றுணை வேதியன்
மற்றுப் பற்றெனக்கு
ஆரூர் தில்லை
தில்லை சிற்றம்பலமும்
காட்டூர்க் கடலே
வரிய மறையார்
வடிவேறு திரிசூலம்
பொடியுடை மார்பினர்
அரவணையான்
பந்துசேர் விரலாள்
வேற்றாகி விண்ணாகி
வேயுறு தோளிபங்கன்
குலம்பலம் பாவரு
தில்லைவாழ் அந்தணர்
வாசி தீரவே
வளைந்தது வில்லு
வட்டனை மதிசூடியை
பட்டியேறு
இடரினும் தளரினும்
சுண்ணவெண் சந்தன
மாசில் வீணையும்
நின்று மலர் தூவி
சூலபாணியை
செப்ப நெஞ்சே
ஆலந்தான் உகந்து
மீளா அடிமை
கண்டுகொள்ளரியானை
சிவபுராணம்

                ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam